Published Date: September 11, 2023
CATEGORY: CONSTITUENCY
மதுரை மாவட்ட கோர்ட்டு எதிரில் உள்ள தாஜ் மருத்துவமனையில் ப்ரீத்திகா கண் மருத்துவமனையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். கண்புரை மற்றும் கருவிழி பிரிவை அரவிந்த் கண் மருத்துவமனையின் கருவிழி சிகிச்சை பிரிவு தலைவர் வெங்கடேஷ் பிரசன்னா தொடங்கி வைத்தார். லென்ஸ் பாக்ஸ் கண் டெய்னரில் அமைக்கப்பட்ட தனித்துவமான கண்ணாடி ஷோரூம் வேளாண்மை உணவுத் தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேல் திறந்து வைத்தார் .
இதுகுறித்து டாக்டர் ப்ரீத்திகா குணல் கூறுகையில், மதுரையில் தாஜ் மருத்துவமனை கடந்த 50 வருடங்களாக மகப்பேறு சிகிச்சையில் முன்னணியில் உள்ளது. இந்த மருத்துவமனையில் எலும்பியல் மருத்துவ பிரிவை டாக்டர் குணல் 2019ல் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். தற்போது 15 வருட அனுபவத்துடன் புதிதாக இங்கு ப்ரித்திகா கண் மருத்துவப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் லேசர் கண் புரை அறுவை சிகிச்சை, கருவிழி அறுவை சிகிச்சை உள்ளிட்ட அதிநவீன சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. கருவிழியின் அமைப்பை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் அதிநவீன எந்திரம் மூலம் மதுரையில் முதன்முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் அனைத்து வசதிகளும் கொண்ட ஆபரேஷன் தியேட்டர் வசதியும் உள்ளது என்றார்.
Media: DAILYTHANTHI